வெறுமையின் மிச்சங்கள்
ஒற்றைக் கவிதை பற்றிப் பேசுவதும், ஒரு தொகுப்பு பற்றிப் பேசுவதும் இரு வேறு செயல்பாடுகள். கவிதைத் தொகுப்பு முழுமையான படைப்புலகத்தின் ஒரு துண்டு. அதே சமயம், தன்னளவிலேயே முழுமையானது. தன்னை வாசிப்பதற்கான அளவீடுகளையும் தானே உருவாக்கித் தரக்கூடியது. கவிதை வாசித்தலுக்கான அலகுகளையும் உருவாக்கித் தர வல்லது.
‘மொழியின் அந்தரங்கமே கவிதை’ என்றொரு கூற்று உண்டு. ஆனால் ஒரே மொழியில் எழுதப்பட்ட காரணத்தாலேயே அவற்றை ஒரே தளத்தில் வைத்துப் பேச முடியாது – ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாலேயே, அமெரிக்கக் கவிதைகளையும் ஆங்கிலேயக் கவிதைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பேச முடியுமா?
அந்தந்தக் காலகட்டத்தின், அந்தந்தப் பிரதேசத்தின் அந்தரங்கம் என்றுகூடச் சொல்ல முடியும்.
அந்தந்த வட்டாரத்தில் புழங்கும் பேச்சு வழக்குகளுக்கும்கூட ஒரு பங்கு இருக்கிறது. உதாரணமாக, &lsquo