வேறொன்றும் கேளேன்
ஓவியங்கள்: மணிவண்ணன்
1.
வேறெதுவும் இல்லை
எப்படிச் சாகலாம்
என்பதுதான்
ஒரே
யோசனை.
2.
வாழ்க்கை
அவ்வளவு சுதந்திரமாகவா
இருக்கிறது
நினைத்த பொழுதில் சாக...
ஒன்றும் அவசரமில்லை
இன்னும் கொஞ்ச நாள்
வாழுங்கள்
சொல்லி அனுப்புகிறோம்.
3.
நிறை போதையில்
விதியிடம் கேட்டேன்,
என்னைக் கொல்ல
ஒரேயொரு சொல் போதுமே
ஏன்
இத்தனை ஆயுதங்களை வீணடிக்கிறாய்.
4.
மரணத்தை
எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
கடைசி எழுத்துக்கு
அருகில்
முற்றுப்புள்ளி இருக்க வேண்டுமே...
அதோ,
என்னைப் பரிகசித்தபடி
ஆழத்தில்
எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
5.
ஏன் இப்படிச்
சலித்துக்கொள்கிறாய்?
பின்னென்ன,
ஒரேயொரு
மரணத்திற்கு
ஆயுள்வரை
காத்திருக்க வேண்டுமா?
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com