பிழைக்குமா நிகோபார் தீவு?
அலையாத்திக் காடுகள்
பழைய புதிர்வினா ஒன்று. இந்தியாவின் தென்கோடிப் புள்ளி எது? விடை, கன்னியாகுமரி அல்ல; நிகோபார் தீவின் தெற்குமுனையான இந்திரா பாயிண்ட். அதன் முந்தைய பெயர் பிக்மேலியன் பாயிண்ட். The Great Nicobar என்றறியப்படும் இந்தத் தீவு இன்று ஒரு பெரும் சூழலியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.
நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் அந்தமான்–நிகோபார் தீவுகளைப் பற்றி நம்மில் பலருக்கு, அங்கிருக்கும் சிறையைத் தவிர, வேறொன்றும் தெரியாது. 1857 எழுச்சிக்குப் பின், கைதிகளைத் தீவாந்தரச் சிட்சைக்கு அனுப்பும் திட்டம் தீட்டப்பட்டபோதுதான் பிரிட்டிஷ் அரசின் கவனம் இந்தத் தீவுகளின் பக்