மலையாளத் திரையுலகில் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டியின் அறிக்கை அதிர்ச்சிகரமான பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதையொட்டித் திரையுலகிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12ஆம் தேதி புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 72. சுவாசக்குழாயில் ஏற்பட்ட தீவிர நோய்த்தொற்றின் காரணமாக ஆகஸ்டு 19ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்டு 8ஆம் தேதி
காலச்சுவடு செப்டம்பர் 2024 இதழில் வெளியான ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘சண்டாளனும் பறையனும்’ கட்டுரை தொடர்பாகச் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ‘சண்டாளன்’ என்பதற்கான வரையறையை மனுதர்ம சாஸ்திரமே தருவதாகக் குறிப்பிடும் அவர் ‘சூத்திரனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமியின் மூத்த மகனாகப் பிறந்த நடேஷ் இளம் வயதிலேயே தந்தையின் கலை, இலக்கியச் சூழலுக்கு அறிமுகமான நிலையில் அவருடைய உத்வேகங்களுடனும் இலக்குகளுடனும் இணைந்து செல்பவராகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார். 1977இல் கூத்துப்பட்டறையைத் தொடங்கி முத்துசாமி தன்னுடைய ஈடுபாடுகளுக்கு வடி
பல வருடங்களுக்கு முன்பு, நடேஷின் ஓவியங்கள் குறித்து ஓவிய நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில், ஏனைய விஷயங்களுடன், அவரது ஓவியங்களில் காலமும் இடமும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அல்லது அந்த ஓவியங்கள் காலம் இடம் ஆகியவற்றிலிருந்து தப்பிச் செல்வனவாக இருப்பதை உணர்ந்தோம். இது பார்வையாளராகிய நம்மை நி
காந்தியின் வாழ்வில் அறியப்படாத காரியங்களில் ஒன்று, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது உருவாக்கிய கால்பந்து அணி பற்றியதாகும். இவரின் இந்தச் செயல் அதிகம் கவனம் பெறாததற்கான காரணமாக, அவருடைய 98 நூல்களைக் கொண்ட பெருந்தொகுப்பில் இந்த நிகழ்ச்சி விடுபட்டுப்போனதாக இருக்கலாம். இந்தப் பருமனான தொகுப்பில்
உலகத் தலைவர்களைக் கருத்தில் கொண்டால் காந்தியிடம் அரேபியர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். காந்தியின் மதச்சார்பற்ற கொள்கை, முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் காந்தி காட்டிய ஈடுபாடு, அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளான அரபு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்
சென்னைக்கு அடுத்து, பரப்பளவிலும் விற்பனையிலும் முக்கியமானதாக இருப்பது மதுரைப் புத்தகக் காட்சி. குளிரூட்டப்பட்ட அரசு அரங்கில் நடைபெறும் ஒரே புத்தகக் காட்சியாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பபாசி மட்டுமே பொறுப்பேற்று நடத்திவந்தபோது, மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் ஐஏஎஸ் போன்றவர்கள் ம
1. வானம் உலகுக்கானதென்பதை மறந்து எங்களுக்குக் குடையானது வளர்ந்துகொண்டிருக்கும் மரத்தின் அடியில் அமர்ந்தோம் ஐவரும் ஆதிக்கிழவனொருவன் காக்கையாய் அருகில் திசையற்றிருந்த உரையாடல் மையம் கொண்டது பால்யத்தின் காதலில் ஐந்து சிறுவர்களும் ஆளுக்கொரு கதை கூறிட குடைக்குள் மழை
ஓவியம்: ரோஹிணி மணி சுந்தர ராமசாமி 1990களின் இறுதியாண்டுகளில் தன் நாட்குறிப்பில் எழுதிய சில குறிப்புகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். கதை, கவிதை, கட்டுரை, கடிதம், நாட்குறிப்பு, சிறு குறிப்புகள் என எதை எழுதினாலும் சு.ரா. அந்த எழுத்தின் மீது காட்டும் ஈடுபாடும் தீவிரமும் அலாதியானவை. உண்மையின் குரலு
குறி தவறாத அம்புகள் மரம் தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை பறவை தெரிகிறதா இல்லை பறவையின் கண் தெரிகிறதா தெரிகிறது சரியாக அம்பு எறிகிறவனால் இவ்வுலகம் இரத்தக்கறை படிந்ததாய் இருக்கிறது தன் குச்சியைத் தன்விருப்பத்திற்கே தாண்டும் குரங்குகள்... என்னை எப்பொழுதும் கட்டுக்கு
விஜயா வாசகர் வட்டம் ‘கே.எஸ். மொழிபெயர்ப்பு விருதை’ இந்த ஆண்டு ஆர். சிவகுமாருக்கு வழங்கியது. ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் சிவகுமாரின் பங்களிப்பை விளக்கி மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ஆற்றிய உரையின் சுருக்கம் இது. நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையான மொழிபெயர்ப்பாள
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன் நான் உங்களிடம் சொல்லப்போகும் இந்தக் கதை காலீத் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் முன்னும் பின்னுமாகத் தனித்தனி நிகழ்வுகளாக எட்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது. அப்போதெல்லாம் பல இரவுகளில் காலீத்தின் கண்களின் வழியே சிரியாவின் போர் வீதிகளில் அலைந்து திரிந்திருக்கிறேன். ராக
Courtesy: smediatodaynews.in நாட்டின் ஆளும் கட்சியாக ஆன 2014முதல் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உளவியல் போரையும் அவர்களின் மீதான தாக்குதலையும் பேரளவில் நடத்திவருகிறது பாஜ.க. ஒளிவுமறைவில்லாத் தாக்குதல். இந்த உளவியல் போர் கீழ்மட்டத் தொண்டர்களால் மட்டும் நடத்தப்படுவதில்லை; நேரடியாகப் பிர
1919 ஜனவரி மாத இறுதி. ஏராளமான தேசிய இயக்க நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்ட ‘கணேஷ் கம்பெனி’ என்னும் கணேஷ் வெளியீட்டு நிறுவனம் ‘இந்தியாவும் சுய ஆட்சியும்’ என்னும் நூலை வெளியிட்டது. சென்னை மாகாணத்தில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவரும், ஆங்கிலேய ஆட்சியின் மீத
‘உ.வே. சாமிநாதையர்க்கு வழிகாட்டியாகவும் சில வழிகளில் அவரினும் மேம்பட்டவராயும் விளங்கிய தாமோதரம் பிள்ளை’ எனக் க. கைலாசபதி (ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.24) குறிப்பிடுகிறார். யார் மேம்பட்டவர் என்னும் விவாதத்திற்குள் இப்போது செல்ல விரும்பவில்லை. ‘வழிகாட்டி’ பற்றி சிறுஉரையாடலைத்
அவனைக் கண்டீர்களா? (குறுநாவல்) பா.அ. ஜயகரன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. ரோடு நாகர்கோவில் - 627 001 பக். 216 ரூ. 270 தமிழ்த் தேசியப் போரிலக்கியம் வெளிப்படுத்திய மூடுண்ட பதிவுகளிலிருந்து நாம் உருவாக்கிக்கொண்டி ருக்கும் மனப்பதிவுகளுக்கு அப்பால் போர
இஸ்தான்புல் நகரில் எல்லாத் தெருக்களிலும் சந்து பொந்துகளிலும் கட்டடங்கள், உணவகங்கள், கடைகள், மசூதிகள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றின் அருகில் பூனைகளுக்காகக் கச்சிதமாக வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மரவீடுகள், உணவுக் கொள்கலன்கள், நீர்க்கிண்ணங்களைக் காண்பது வழக்கமான காட்சி. பழங்கால அரண்மனைகள், பிரமா
நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘நாம் ஏன் மரணமடைகிறோம்?’ நூலைப் பற்றிய அறிமுகம் என் பன்னிரண்டாம் வயதில் தஞ்சையில் நடைபெற்ற சோவியத் ருஷ்யா புத்தகக் கண்காட்சியில் யா. பெரல் மான் எழுதிய ‘பொழுதுபோக்குப் பௌதிகம்’ நூலினை வாங்கிப் படித்தேன். அதில் &lsq
‘Strip Tease’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி நான் போலந்தில் இருந்தபோது (1982-86) ‘Internal immigration’ என்ற ஒரு புது சொல்லாட்சியைக் கேட்டேன். அப்போது போலந்தில் ராணுவச் சர்வாதிகார ஆட்சி. பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ இல்லை. பிரபலக் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்ப
தண்பதம் (புதிய நோக்கில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) பதிப்பாசிரியர்கள்: ஸ்ரீ பிரசாந்தன், எம்.எம். ஜெயசீலன் வெளியீடு பதிப்பு தமிழ் துறை பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை. பக். 800 ரூ. 138 தண்பதம் என்பதற்குப் புதுப்புனல் (புதிய) என்று சிலப்பதிகார உரையாசிர
டெரிதாவின் கடல் கடலை விரித்து வைத்துவிட்டு கரையை வெறித்துக்கொண்டிருக்கிறார் டெரிதா. அவரது கண்களில் அலைகளின் நுரை ததும்புகிறது. அவரின் பூனை கடலைப் பார்த்துக் கத்துகிறது. அதன் முதுகைத் தடவிக்கொண்டே டெரிதா சிரித்துக்கொள்கிறார். அகாலத்தின் முகத்தில் ஒட்டிய அவரது புன்னகையில்
-
கட்டுரைஉரைகதைபாரதியியல்அஞ்சலி: சீதாராம் யெச்சூரி (1952 & 2024)ஓவியங்கள்அஞ்சலி: மு. நடேஷ் (1960&2024)எதிர்வினைமதிப்புரைசு.ரா. நாட்குறிப்புகள்கவிதைகள்தலையங்கம்