காந்தியின் கால்பந்தாட்ட அணி
காந்தியின் வாழ்வில் அறியப்படாத காரியங்களில் ஒன்று, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது உருவாக்கிய கால்பந்து அணி பற்றியதாகும். இவரின் இந்தச் செயல் அதிகம் கவனம் பெறாததற்கான காரணமாக, அவருடைய 98 நூல்களைக் கொண்ட பெருந்தொகுப்பில் இந்த நிகழ்ச்சி விடுபட்டுப்போனதாக இருக்கலாம். இந்தப் பருமனான தொகுப்பில் ஒரே ஒரு முறைதான் உதைப்பந்தாட்டம் குறிப்பிடப்படுகிறது.
காந்தி The Times of Indiaக்கு 20-10-1896இல் வரைந்த கடிதத்தில் இந்தியர்களை இரயிலிலும் தண்டூர்தியிலும் (tram) மிருகங்களைப்போலவும் மரியாதையற்ற முறையிலும் அதிகாரிகள் நடத்துகிறார்கள் என்றும் இந்தியர்கள் கால்பந்துபோல் உதைக்கப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார். இதுபோல் அவரின் வாழ்வில் மிகக் குறைவாக அறியப்பட்ட நிகழ்வுகளில் வேறொன்று, இவர் நிறுவிய வித்யாபீடக் கல்லூரியில் விவிலியம் புதிய ஏற்பாட்டைப் பற்றி அவர் நடத்திய வகுப்புகள் பற்றியது. மற்