எனக்குத் தமிழ்ப் பிரதியே போதும்
விஜயா வாசகர் வட்டம் ‘கே.எஸ். மொழிபெயர்ப்பு விருதை’ இந்த ஆண்டு ஆர். சிவகுமாருக்கு வழங்கியது. ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் சிவகுமாரின் பங்களிப்பை விளக்கி மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ஆற்றிய உரையின் சுருக்கம் இது.
நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையான மொழிபெயர்ப்பாளரான ஆர். சிவகுமாரைச் சக மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில் அல்லாமல் அவருடைய மாணவன் என்ற நிலையிலிருந்தே வாழ்த்துரை வழங்க வந்திருக்கிறேன். வாழ்த்துவது என்பது தமிழ் மரபு. கடவுள் வாழ்த்திலிருந்துதான் அன்றைய படைப்புகள் தொடங்குகின்றன. எனவே என் உரை ஆசிரியர் வாழ்த்து.
இவரது மொழியாக்கங்கள் எனக்கு முதலில் அறிமுகமானது எனது 22ஆவது வயதில்தான். கொஞ்சம் தாமதமான அறிமுகம். சென்னை ராயப்பேட்டை பைலட் திரையரங்கம் அருகிலிருந்த ‘க்ரியா’ அலுவலகத்தில் திலீப்குமார் &lsq