முடிவின்றி நீளுமா மனித வாழ்வு-?
நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘நாம் ஏன் மரணமடைகிறோம்?’ நூலைப் பற்றிய அறிமுகம்
என் பன்னிரண்டாம் வயதில் தஞ்சையில் நடைபெற்ற சோவியத் ருஷ்யா புத்தகக் கண்காட்சியில் யா. பெரல் மான் எழுதிய ‘பொழுதுபோக்குப் பௌதிகம்’ நூலினை வாங்கிப் படித்தேன். அதில் ‘நிரந்தர இயக்க இயந்திரம்’ என்ற கட்டுரை உள்ளது.
முடிவே இல்லாமல் ஓர் இயந்திரம் நிரந்தரமாகச் சுழன்றுகொண்டே இருக்க முடியுமா என்ற கேள்விக்குப் பௌதிகரீதியில் முடியும் என்ற கருத்தை அது முன்வைத்த போது எனக்குப் பெரும் திகைப்பு உண்டாயிற்று. ஆனால் இது கருத்தி