இஸ்தான்புல்: பூனைகளின் நகரம்
இஸ்தான்புல் நகரில் எல்லாத் தெருக்களிலும் சந்து பொந்துகளிலும் கட்டடங்கள், உணவகங்கள், கடைகள், மசூதிகள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றின் அருகில் பூனைகளுக்காகக் கச்சிதமாக வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மரவீடுகள், உணவுக் கொள்கலன்கள், நீர்க்கிண்ணங்களைக் காண்பது வழக்கமான காட்சி.
பழங்கால அரண்மனைகள், பிரமாண்டமான மசூதிகள், வண்ணமயமான பஜார்கள் எங்கும் எப்போதும் பூனையின் கண்காணிப்பின் கீழ் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருக்க, இந்த நகரம் பூனைகளால் இயங்குவது போலத் தோற்றமளிக்கும்.
இஸ்தான்புல் நகருக்கான பயணத்தைத் திட்டமிடும்போது கற்பனைசெய்த முதல் விசயங்களில் நிச்சயமாகப் பூனைகள் இருக்கவில்லை. ஆனால் அவை ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பிரபலமான சுற்றுலாத் தளத்திலும் தவிர்க்க முடியாத முக்கிய அம்சம்.
கடைக்காரர்கள் நேரத்திற்கு நேரம் உணவு களால் உபசரிப்பதாலும் தங்களைச் சுற்றிவர அனுமதிப்பதாலும் கடை வாசல்களில் பூனைகள் வரிசை கட்டிச் சுருண்டு கிடக்கின்றன. ஒவ்வொரு தெருவின் விளிம்புகளையும் கம்பீரத்துடன் சுற்றிவருகின்றன. ஒவ்வொரு தோட்டத்திலும் புதர்களைக் கட்டிக்கொண்டு, பூனைகளுக்கென்றே நிர்