சி.வை.தா. & உ.வே.சா. யாருக்கு யார் வழிகாட்டி?
‘உ.வே. சாமிநாதையர்க்கு வழிகாட்டியாகவும் சில வழிகளில் அவரினும் மேம்பட்டவராயும் விளங்கிய தாமோதரம் பிள்ளை’ எனக் க. கைலாசபதி (ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.24) குறிப்பிடுகிறார். யார் மேம்பட்டவர் என்னும் விவாதத்திற்குள் இப்போது செல்ல விரும்பவில்லை. ‘வழிகாட்டி’ பற்றி சிறுஉரையாடலைத் தொடங்க எண்ணம். போதுமான தரவுகள் கிடைக்காத காலத்தில் இக்கருத்தைக் க. கைலாசபதி கூறியுள்ளார். இப்போது ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி 1’ நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். அதில் உ.வே.சாமிநாதையருக்குச் சி.வை.தாமோதரம் பிள்ளை எழுதிய 42 கடிதங்கள் உள்ளன. இருவருக்கும் இடையேயான உறவை மதிப்பிடவும் அக்காலப் பதிப்புச் சூழலை அறியவும் அவை மிக முக்கியமான சான்றுகளாக விளங்குகின்றன.
இருபெரும் ஆளுமைகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் ‘பதிப்பும் பூசலும் : சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதையரும்’ என்னும் விரிவான கட்டுரை ஒன்றையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ‘சி.வை.தா - உ.வே.சா. கடிதப் போக்குவரத்தின் ஒரு பக்கம் மட்டும