யெச்சூரி எனும் துருவ நட்சத்திரம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12ஆம் தேதி புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 72. சுவாசக்குழாயில் ஏற்பட்ட தீவிர நோய்த்தொற்றின் காரணமாக ஆகஸ்டு 19ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்டு 8ஆம் தேதி மறைந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்குக் கொல்கொத்தாவிற்கு நேரில் செல்ல முடியாத நிலையை வருத்தத்துடன் குறிப்பிட்டு ஆகஸ்டு 22ஆம் தேதி தனது புகழஞ்சலி உரையைக் காணொளியாகத் தனது முகநூல் பக்கத்திலும் X (ட்விட்டர்) பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தார். அடுத்த இருபது நாட்களில் அவரையும் மரணம் தழுவும் என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சுவாசக்குழாய் நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோதிலும் குணமாகிவிடுவார் என்றே அனைவரும் தொடக்கத்தில் எதிர்பார்த்திருந்தனர்.
இந்திய இடதுசாரி இயக்கத்தின் துருவ நட்சத்திரங்களுள் ஒன்று உதிர்ந்தது.
இந்துத்துவத்தை வீழ்த்துவதற்குக் கடந்த பத்தாண்டுகளாகத் தேசிய அளவில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான ஓர் அர