ந. பெரியசாமி கவிதைகள்
1.
வானம்
உலகுக்கானதென்பதை மறந்து
எங்களுக்குக்
குடையானது
வளர்ந்துகொண்டிருக்கும் மரத்தின்
அடியில் அமர்ந்தோம் ஐவரும்
ஆதிக்கிழவனொருவன் காக்கையாய் அருகில்
திசையற்றிருந்த உரையாடல்
மையம் கொண்டது
பால்யத்தின் காதலில்
ஐந்து சிறுவர்களும்
ஆளுக்கொரு கதை கூறிட
குடைக்குள் மழை
ததும்பும் மகிழ்வோடு
பத்துபேர் ஆடிக்கொண்டிருந்தனர்
பந்தல் அமைத்தது
வானில் காக்கைக் கூட்டம்.
2.
மரங்கள்
நிலத்தின் அடியில்
சூரியன்களை முடிச்சிட்டு வைத்துள்ளன
வேர்களெனப் பெயரிட்டதேனோ<