முகிலன் கவிதைகள்
குறி தவறாத அம்புகள்
மரம் தெரிகிறதா
இல்லை
கிளை தெரிகிறதா
இல்லை
பறவை தெரிகிறதா
இல்லை
பறவையின் கண்
தெரிகிறதா
தெரிகிறது
சரியாக அம்பு எறிகிறவனால்
இவ்வுலகம்
இரத்தக்கறை படிந்ததாய் இருக்கிறது
தன் குச்சியைத் தன்விருப்பத்திற்கே தாண்டும் குரங்குகள்...
என்னை எப்பொழுதும் கட்டுக்குள் வைக்கவே
மூன்று குரங்குகளை
வாங்கி வளர்க்கிறேன்
மனையாளை நோக்கி
விஷச்சொற்களை வீசும்போதெல்லாம்
குரங்குகளில் ஒன்று
ஓடிப்போய் அவள் வாயினைப் பொத்துகிறது
விஷத்தை மெருகேற்றி அவள்
திருப்பிச் செலுத்த
மற்றொரு குரங்கு
ஓடோடி வந்து
என் செவிகளைப் பொத்துகிறது.
மூன்றாவது குரங்கோ
தன் கண்ணைத் தானே
பொத்திக்கொண்டதுபோல் பாசாங்கு செய்கிறது.
முழுமை
யாருமற்ற மேசையின் மீது<