வஃக்ப் வாரியம் சட்டப்பூர்வ வழிப்பறி
Courtesy: smediatodaynews.in
நாட்டின் ஆளும் கட்சியாக ஆன 2014முதல் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உளவியல் போரையும் அவர்களின் மீதான தாக்குதலையும் பேரளவில் நடத்திவருகிறது பாஜ.க. ஒளிவுமறைவில்லாத் தாக்குதல். இந்த உளவியல் போர் கீழ்மட்டத் தொண்டர்களால் மட்டும் நடத்தப்படுவதில்லை; நேரடியாகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கட்சியின் இதர தலைவர்களும் மிகச் சாதாரணமான பேச்சாளர்கள்போலச் செயல்பட்டு நடத்திவருகிறார்கள். இவர்களுடைய அனைத்து உரைகளுக்கும் ஊடகங்கள் பேரளவில் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்புகின்றன; பிரசுரம் செய்கின்றன. வகுப்புவாத நோக்கிலான அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதற்கு யாதொரு தடையுமில்லையென்றும் அவை கூறுகின்றன. இந்தப் பேச்சுக்களால் தூண்டப்படுவோர் வன்முறையில் ஈடுபட்டுவருவதும் அதிகரிக்கின்றது. இவ்வகையில்