தார்மிகப் போராட்டம்
‘Strip Tease’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி
நான் போலந்தில் இருந்தபோது (1982-86) ‘Internal immigration’ என்ற ஒரு புது சொல்லாட்சியைக் கேட்டேன். அப்போது போலந்தில் ராணுவச் சர்வாதிகார ஆட்சி. பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ இல்லை. பிரபலக் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்பட) ‘internal immigration’ நிலையில் இருப்பதாக என் வார்ஸா பல்கலைக்கழகப் பேராசிரிய நண்பர்கள் கூறினார்கள். இதன் அர்த்தத்தையும் எனக்கு விளக்கினார்கள்.
ராணுவ அரசாங்கம் இன்னதுதான் எழுதலாம், இன்னது எழுதக் கூடாது என்று ஆணையிடலாமேயன்றி, ஓர் எழுத்தாளரை அவர் எழுதித்தான் ஆக வேண்டுமென்று கட்டளையிட முடியாது; ஓவியர்களைப் படம் வரைய வற்புறுத்த இயலாது; பாடகர்களைப் பாடும்படியாகக் கட்டாயப் படுத்தல் கடினம