ஆரெயில் நெடுங்கொடி
ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
நான் உங்களிடம் சொல்லப்போகும் இந்தக் கதை காலீத் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் முன்னும் பின்னுமாகத் தனித்தனி நிகழ்வுகளாக எட்டு வருடங்களுக்கு முன்பு சொன்னது. அப்போதெல்லாம் பல இரவுகளில் காலீத்தின் கண்களின் வழியே சிரியாவின் போர் வீதிகளில் அலைந்து திரிந்திருக்கிறேன். ராக்கெட் குண்டுகளுக்கு அஞ்சி இடிபாடுகளில் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறேன். ஹபீப் பற்றி காலீத் பேசும்போது நான் காட்டும் அதீத ஆர்வத்தைப் பார்த்து ஒருமுறை கேட்டார்: “நான் சொல்வதையெல்லாம் கதையாக எழுதப் போகிறாயா என்ன?” அ