அரபு இலக்கியத்தில் அண்ணல் காந்தி
உலகத் தலைவர்களைக் கருத்தில் கொண்டால் காந்தியிடம் அரேபியர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். காந்தியின் மதச்சார்பற்ற கொள்கை, முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் காந்தி காட்டிய ஈடுபாடு, அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளான அரபு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டது ஆகியவை அவற்றுள் முக்கியமானவை.
எகிப்து, பலஸ்தீன், இராக் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் காந்திக்கு நெருக்கமான உறவு இருந்துவந்திருக்கிறது. இதன் தாக்கத்தை அரபு இலக்கியங்களில் நம்மால் காண முடிகிறது. காந்தி குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் அரபுமொழியில் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை எகிப்து அறிஞர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
1931இல் பிரிட்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் லண்டன் செல்லும்வழியில் சூயஸ் கால்வாயை அடைந்தபோ