தலித் என்னும் சொல்லாடலின் அரசியல்
வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரிய
கறுப்பனாய் இருந்துபார்
பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்
பறையனாய் இருந்துபார்
ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறு தெரியத்
தமிழனாய் இருந்துபார்
வல்லாங்கு செய்யப்பட்ட
பெண்ணாய் இருந்துபார்
-இன்குலாப்
கறுப்பனாய் இருந்துபார்
பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்
பறையனாய் இருந்துபார்
ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறு தெரியத்
தமிழனாய் இருந்துபார்
வல்லாங்கு செய்யப்பட்ட
பெண்ணாய் இருந்துபார்
-இன்குலாப்
மீண்டும் மீண்டும் தலித் இலக்கியம் கேள்விக்குட்படுத்தப் படுகிறது. 'காய்த்த மரத்தில்தான் கல்லடிபடும்' என்பார்கள். தலித் இலக்கியமும் அப்படித்தான். தலித் படைப்பாளிகள் தீவிரமாக இயங்க இது போன்ற வசையுரைகள் தேவைதான் என்றாலும் அதைச் சொல்லுகிற நபர்களின் உள்நோக்கம் வேறு.
"தலித் இலக்கியங்களில் தலித், எண்ணெய் தேய்க்காமல் பரட்டைத் தலையுடன் இருப்பான், கோபப்படுவான், சண்டை போடுவான், தலித் பெண் சோரம்" போவாள் என்கிறார் சோ. தர்மன். "தலித் இலக்கியத்தை ஒப்புக்கொண்டால் பிராமண இலக்கியமும் உ