பிரான்சிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
நெய்தல் இலக்கிய அமைப்பு அளித்துவரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி
விருது’ இந்த ஆண்டு பிரான்ஸிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்டது. சான்றிதழும் பத்தாயிரம்
ரூபாய் ரொக்கத் தொகையும் அடங்கிய இவ்விருது வழங்கிய நிகழ்ச்சி 19.10.2008 அன்று
நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி சென்டர் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நெய்தல் கிருஷ்ணன் தலைமையேற்க, தேர்வுக்குழு அறிக்கையைக் கவிஞர் சுகுமாரன் படித்தார். தமிழவன் சு.ரா. விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார். பிரான்ஸிஸ் கிருபா விருதைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறினார். அரவிந்தன் விழா நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை ராஜமார்த்தாண்டன் ஒருங்கிணைத்தார்.
“பிரிட்டனில் வட்டார மொழிகளைப் பற்றிய பதிவுகளைப் பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் வைத்திருக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் வட்டார மொழியைப் பரிகாசம் செய்கிறோம். இந்த மாவட்டத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே நான் கர்நாடகம் சென்றுவிட்டாலும் நண்பர்கள் என்னிடம் நாகர்கோவில் மொழியின் சாயல் உள்ளது என்கின்றனர். இது எனக்குச் சந்தோஷமான விஷயம்தான். நான் பிரான்சிஸ் கிருபாவின் கவி