காலத்தின் கானல் - 9
சுந்தர ராமசாமி நாகர்கோவில்
23.4.1982
அன்புள்ள புஷ்பராஜன்,
உங்கள் 19.4.1982 கடிதம். அதைப் படித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் வந்துபோனதில் எங்களுக்கு எவ்வளவோ சந்தோஷங்கள். எல்லாவற்றையும் உங்களிடம் கூறிக்கொண்டிருப்பது அழகல்ல. ஆனால் ஒரு உண்மையான ஜீவனை, அன்புள்ளம் கொண்ட ஜீவனைச் சந்திக்கும்போது - இவற்றைத் தேடிக் கிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்கும்போது - கிடைக்கும் பரவசத்தை மறைப்பது அழகல்ல. எது சகல உன்னதங்களுக்கும் அடிப்படையோ அது உங்களிடம் இயற்கையில் கூடி நிற்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட உங்கள் ஆளுமை முழுக்கவும் வெளிப்பட்டு நீங்கள் மிகவும் மேலான நிலைக்கு வர வேண்டும் என்று நான் உணர்ச்சிவசப்பட ஆசைப்படுகிறேன். ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு மிகச் சுருங்கிய நேரத்திலேயே ஆழ்ந்த நட்ப