வானவில்லின் கண்ணீர்
அக்டோபர் மாதம் மதுரையில் ‘கூடு’ பெண்கள் இயக்க அமைப்பும் மதுரைக் கல்லூரியின் தத்துவத் துறையும் இணைந்து பெண்களை மையமாக வைத்துப் பெண் இயக்குநர்களால் எடுக்கப்பட்டிருந்த ஆவண, குறும்படங்கள், முழு நீளப்படங்கள் இடம்பெற்ற இரண்டாம் உலகத் திரைப்பட விழாவை (பெண்கள்) நடத்தின. திரைப்படங்களின் மூலம் பெண்ணிற்கான தனிமொழியை வகுக்க இயலுமா? இதனை நோக்கிப் பயணித்த பெண் இயக்குநர்கள் எந்த அளவிற்கு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? இது போன்ற கேள்விகள் சார்ந்த விவாதத்தை நோக்கி நம்மை நகர்த்தும் விதமான திரைப்படங்களை எடுத்துள்ள சேட்டல் அக்கர்மேன், மார்த்தா மெஸ்ராஸ், மார்க்கரெட் வான்ட்ராட்டா, ஒலீனா, சோனாலி போஸ், அபர்ணா சென், தீபா மேத்தா, தீபா தன்ராஜ், லீனா மணிமேகலை போன்ற இயக்குநர்களது படங்களின் திரையிடலும் அவை குறித்த விவாதங்களும் நடைபெற்றன.
முதல்