'மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டம்'
செப்டம்பர் 2008 இதழில் "சென்னகரம்பட்டி: அதிகாரத்தின் ஓலம்" என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரையில் விடுபட்டுப்போன சில அடிப்படை உண்மைகளைப் பதிவுசெய்கிறேன். தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலை உணர்வை வளர்க்க அம்பேத்கரின் அனுபவப் பகிர்வை உள்வாங்கியாக வேண்டும். இதற்கான தொடர் விவாதத்தைக் காலச்சுவடு நடத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்.
5.7.1992இல் தலித்துகள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகள் கழித்து 4.8.2008இல் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் சாதி, பணம், அரசியல், வன்முறை போன்றவற்றின் ஆதரவு எவையுமற்ற தலித் மக்கள் இத்தீர்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது அவர்கள் மேற்கொண்ட சட்டரீதியான போராட்டங்களின் வலிமையைக் காட்டுகிறது என்பதைக் கட்டுரையாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையை விரும்புவது இயல்புதான். அவர்களுக்கான ஆதரவு நேர்மையாக இருக்கும்போது விடுதலை உணர்வின் வெளிப்பாடு வலுவாகவே இருக்க முடியும். குழுவாகச் செயல்படுகிற வழக்கறிஞர்களாகிய எங்களால் அனுபவரீதியாக இதை உணர முடிகிறது. கட்டுரை யாசிரியர் வழக்கிற்கான பொறுப்பை நான்