ஸ்பானிஷ் செம்புலத்தில் உறங்கும் கவிஞர்
அக்டோபர் 15. மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மூன்றாம் நினைவு நாள். அன்றிரவு அவருக்கும் எனக்கும் எண்பதுகளின் மத்தியில் நவீன நாவல் குறித்து நடந்த உரையாடலை நினைத்துக்கொண்டிருந்தேன். வெளியில் அவ்வளவாகத் தெரியாத உரையாடல் அது. நள்ளிரவு கழிந்த நிலையிலும் காலாற நடந்தேன். மழை வரும் எனத் தெரிந்தது. அப்போதும் அந்த பிஷாரடியின் மாலைச் செம்புல ஓவியம் அகலவில்லை. 'ஜே.ஜே: சில குறிப்புகள்' நாவலில் வரும் ஓர் ஓவியம் அது. அதன் செம்புலத்தை வைத்து ஸ்பானிஷ் கவிஞன் ஃபெடரிக்கோ கார்ஸியா - லோர்க்கா பற்றி நானும் சுந்தர ராமசாமியும் நாகர்கோவிலில் பேசியதும் நினைவுக்குவந்தது.
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஸ்பெயினில் ஃபாஸிஸத்தின் கொடுங்கரங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றன இடதுசாரித் தரப்புக் கவிஞர் - நாடக ஆசிரியர் கார்ஸியா - லோர்க்காவை. இவருடைய சில கவிதைகளைத்