தலித் விமர்சனம்: சில குறிப்புகள்
சோவியத் ரஷ்யாவில் 20ஆம் நூற்றாண்டின் முன்பாதிவரை, 'உற்பத்தி'யாகி வெளிவந்த எழுத்துக்கள் யாவும் ஓரளவு அறம் வழுவியவையாகவே (Morally Flawed) இருந்தன என்று பக்தின் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தனது இறுதி நாள்களில் கூறினார். எதையுமே நேரடியாகச் சொல்லத் தயங்கிய தனது எழுத்துக்களும் இதன் அங்கமாகவே உள்ளது என்பார். கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒரு கருத்தையே பாலஸ்தீனப் போராளியாக வாழ்ந்து, மறைந்த எட்வர்ட் சையத்தும் கூறுவார். அதாவது மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து 'இலக்கியத் திறனாய்வு' என்ற பெயரில் எழுதப்பட்ட (புதுத்திறனாய்வு முதல் ஓரளவு அமைப்பியல்வாதம், பின் அமைப்புவாதம் உள்பட) அனைத்தும் விமர்சகர் தன் இனம், பண்பாடு இவற்றோடு கொண்டிருந்த உறவை, நேசத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்றார். முக்கியமாக, பாலஸ்தீனப் பிரச்சினையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இவையாவும் ஒரு 'மதவாதமாக'ச் செயல்படுவதை அடையாளம் காண முடிகிறதென்கிறார். இவர்களது எழுத்துக்கள் இன்று பிரபலமாகிவரும் 'பண்பாட்டு ஆய்வுகளின்' (Cultural Studies) வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதோடு, 'விமர்சனம்' என்பதைப் பிரதி கடந்த பண்ப