நகல் அசலானது! ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை
சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனைசெய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி எனப்பட்டது. காலப்போக்கில் ஜாவா அரிசி, ஜவ்வரிசியாக மருவிவிட்டது. ஜவ்வரிசி தமிழ்நாட்டில் பாயசம் தயாரிப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் அது சேகோ என்றே அறியப்பட்டு வங்க மக்களின் பிரதான உணவில் ஒரு பகுதியாக விளங்குகிறது. மஹாராஷ்டிரத்தில் சாபுதானா என்று அறியப்பட்டு, அங்கும் பிரதான உணவாகவே உபயோகத்திலிருந்துவருகிறது.
<img align="right" border="0" height="259" hspace="5" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-107/images/image.jpg" vspace="5" widt