காவிரியின் குழந்தைகள்
ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுப்படுத்திக் கொள்ள முடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை.
சில வயதானவர்களுக்குப் பிறர் முகம், பெயர் முதலியன மறந்துவிடுவதை ஒரு காலத்தில் இயல்பான மாற்றமாகக் கருதினார்கள். இன்று அதை ஒரு வியாதியாகக் கருதுகிறார்கள்.
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்பவர் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவருக்குத் தமிழ் எழுதப் படிக்க நன்றாகவே தெரியும். ஆனால் பேச்சுத் தமிழ் அவருக்கு