கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்
மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. 'கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு' என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர்.
கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி
எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை வாசிக்கும்போத