பழுப்புக் காலை
கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் - இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது பார்க்க வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயம். எப்படியும் ஒருநாள் அது இறந்துதான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதை ஒரு பழுப்பு நாய் என்று சொல்லி என்னால் ஏமாற்ற இயலாதுதானே? என்றான் சார்லி.
என்ன செய்வது, லாப்ரடார் வகையின் நிறம் பழுப்பு இல்ல