தலித் அடையாளம்: அங்கீகாரத்தின் நிறங்கள்
தலித் அடையாளத்தின் இன்றைய நிலை குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களிலிருந்து விலகி, வேறொரு அம்சத்தைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. 1990 தொடங்கி தலித் அடையாளம் தலித் அல்லாத தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் அவற்றை தலித் அல்லாதார் எதிர்கொண்டுவரும் விதம் குறித்தும் விளங்கிக்கொள்வது மேற்கண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அமையும்.
அரசியல் என்னும் சொல்லாடல் வெறுமனே நாடாளுமன்ற அரசியல் நடவடிக்கைகளை மட்டும் குறிப்பதாக இல்லாமல் சமூகவியல், பண்பாட்டு நடவடிக்கைகளையும் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றது தலித் அடையாள உருவாக்கத்தின் போதுதான். இச்சொல் ஏற்கெனவே அறிவுத் துறையில் புழங்கிவந்திருந்தாலும் விரிவான பொருளில் கையாளப்பட்டது இப்போதுதான். எனவே தலித் அரசியல் என்னும் சொல்லில் இலக்கிய