பகிரப்பட்ட நினைவுகள்: நீ யார்
நவீன இலக்கியத்தில் தன் படைப்புகள்மூலம் தனக்கெனத் தனி இடத்தையும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி. ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ முதலான நாவல்களினூடாக நன்கு அறியப்பட்டவர். 1931இல் நாகர்கோவிலில் பிறந்த இவர், ‘தண்ணீர்’ சிறுகதை மூலம் படைப்புலகுக்கு அறிமுகமானார். நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களிலும் இயங்கிய சு.ரா., சிறந்த விமர்சகராகவும் திகழ்ந்தார். நவீன இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கிய சு.ரா., குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ‘நீ யார்’ ஆர். வி. ரமணி இயக்கிய இந்த ஆவணப்படம் சுந்தர ராமசாமியின் மூன்றாம் நினைவு நாளான அக்டோபர் 15, 2008 அன்று மாலை ஏழு மணிக்கு அல்லயன்ஸ் ஃப்ரான்சீஸில் திரையிடப்பட்டது.
இப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள்; படைப்புத் தளம் சார்ந்த சு.ராவின் செயல்பாடுகள், விமர்சனக் கருத்துகள், உரையாடல்கள், ஆளுமைகள் குறித்த சு.ராவின் பார்வை, அவர்களுடனான நட்புறவு மற்றும் நேர்காணல்.
சு.ராவின் கவிதைகள், ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’