விரிவுபெறும் பொருளும் மாறுபடும் அடையாளமும்
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ. ஐ. டி) சேர்ந்தபொழுது பின்காலனியத்துவத்தில் ஆய்வு மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தேன். அதேசமயத்தில் தலித் மக்களின் விடுதலையை முன்வைத்து இயங்கும் தலித் அரசியலின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் தலித் இலக்கியப் படைப்புகளின் வீரியம் என்னைப் பாதித்தது. இக்காலகட்டத்தில் இளங்கலை தொழில்நுட்ப மாணவர்களுக்கு தலித் இலக்கியப் பாடம் எடுக்கையில் தலித் இலக்கியம் பற்றிய மாணவர்களின் பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் குறிப்பாக அவர்கள் தலித் இலக்கியத்தை அணுகும்விதமும் இவ்விலக்கியத்தின் தாக்கம் குறித்து என்னை ஆராயத் தூண்டின.
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய, வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி யாகவும் தலித் இலக்கியம் இடம்பெற்று வருகின்றது. ஓர் இலக்கியப் படைப்பின் பொருள் வாசகர் படிக்கும்பொழுதுதான் முழுமையாகப் புலப்படுகிறது. இதனடிப்படையில் தமிழ், ஆங்கில இலக்கியம் பயிலும் இருபால் மாணவர்களிடையே தலித் இலக்கியப் படைப்புகளின் தாக்கம் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன்.
<img align="right" borde