இருளர்களின் தொலைந்துபோன பாடல்கள்
முற்போக்கு முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்பட்டிருக்கும் பவா செல்லத்துரையின் பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. பிரச்சாரம் என்னும் பொதுவான அடையாளத்திலிருந்து விலகி, தான் தொட்டுணர்ந்த வாழ்வை, அதன் இயல்புகளோடு படைப்பாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக, பவாவை அடையாளப்படுத்தும் சில கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மலையும் மலை சார்ந்த வாழ்வும் தமிழ் வாழ்வின் அறியப்படாத ஒரு பகுதி. பொதுச் சமூகத்தின் வாழ்வியல் நடைமுறைகளிலிருந்தும் மதிப்பீடுகளிலிருந்தும் முற்றாக வேறுபட்ட பழங்குடி வாழ்வைக் கலைப்படுத்துவது எந்தவொரு கலைஞனுக்கும் சவாலான காரியம். அந்தச் சவாலைச் சில கதைகளிலேனும் பதற்றமின்றி எதிர்கொண்டிருக்கிறார் பவா.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை |