காற்றின் கலை - தனித்திருந்து செய்த தவம்
சுந்தராம்பாளின் பாட்டை முதன் முதலாக எப்போது கேட்டேன் என்பது நினைவில்லை. ஆனால் நினைவு பின்னோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது நான் ஸ்ரீநிவாசன் என்ற நபரிடம் போய்ச் சேருகிறேன். ஸ்ரீநிவாசன் சுந்தராம்பாளின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பழைய நாட்களுக்குப் போய்ச் சேருகிறேன்.
எங்களுடைய உறவினரான ஸ்ரீநிவாசன் அந்தக் காலத்தில் எப்போதாவது வீட்டுக்கு வருவார். இரண்டோ மூன்றோ நாட்கள் எங்களுடன் தங்குவார். ஸ்ரீநிவாசனை நாங்கள் பாகவதர் என்றுதான் அழைப்போம். கொஞ்சம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள் ஆகியவர்களின் பாட்டுகளை ஸ்ரீநிவாசன் பாடுவார்.
மனப்பிறழ்வுக்கு ஆளான பாகவதர் இளம் பருவத்தில் என்றோ ஊரைவிட்டுப் போயிருந்தார்.
எல்லா நேரமும் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பார் பாகவதர். என்னிடமும் என் அண்ணனிடமும் அவருக்குப் பெரும் வாஞ்சையிருந்தது. எங்களை அருகில் உட்காரவைத்துக்கொண்டு பாடிக் காட்டுவார். சுந்தராம்பாளின்