தமிழகத் தேர்தல் கமிஷன் செயல்பாடு
‘அதிகாரம் இருக்கும், ஆனா இருக்காது’ என்பதற்கு உதாரணமாக நமது அரசு அமைப்புகள் சிலவற்றைச் சொல்லலாம்.
அதில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டியது தேர்தல் கமிஷன்.
இதற்கு சுயசார்புத் தன்மையும் தனி அதிகாரமும் உண்டென்றாலும் இது முழுக்க முழுக்க மத்திய மாநில அரசுகளின் கட்டமைப்புகளையும் ஊழியர்களையும் பயன்படுத்தித்தான் எதையுமே செயல்படுத்த வேண்டி உள்ளது. அந்த வகையில் ஏராளமான பலவீனங்களைக் கொண்டே இந்த அமைப்பு இயங்குகிறது.
வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் ஆராய்ந்து கேள்விக்குட் படுத்தும் ஒரு விஷயத்தைத் தேர்தல் கமிஷன் முழுமையாகச் செய்திருந்தாலே தமிழ்நாட்டில் பிரதான அரசியல்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் போட்டியிடும் தகுதியையே இழக்க நேர்ந்திருக்கும்.
பொதுவாகச் சொத்து விவரங்களைப் பெரும்பாலான வேட்பாளர்கள் கணிசமாக மறைத்துத்தான் தேர்தல் கமிஷனுக்குத் தகவல்கள் தருகின்றனர். குறிப்பாகத் தயாநிதி மாறன், கார்த்திக் சிதம்பரம், ஜெகத் ரட்சகன், ஜே.எம். ஹாரூண்,
ஆ. ராசா, அன்புமணி ராமதாஸ், எல்.கே. சுதிஷ், மு