தமிழ்ப் பதிப்புலகமும் உலகச் சூழலும்
அனைவருக்கும் மாலை வணக்கம்.
பாரீஸ் நண்பர்களுடன் பேசும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திய லக்ஷ்மிக்கும் பௌசருக்கும் நன்றி.
பாரீஸ் என் மனதுக்கு நெருக்கமான நகரம். இதுவரை நான் பயணித்திருக்கும் நகரங்களில் ஆகப் பிடித்தமானது என்றாலும் மிகை இல்லை. 2002இல் முதல் முறையாக இங்கு வந்தேன். கலைச்செல்வன், வாசுதேவன் ஆகியோருடன், அதிலும் குறிப்பாகக் கலைச் செல்வனுடன் இரவு பகலாகப் பாரீஸில் சுற்றி அலைந்தேன். மிகப் பெரிய அனுபவம். பேருவகையில் இருந்தேன். நகரம் ஏற்படுத்திய கிளர்ச்சியுடன் கலைச்செல்வனுடன் ஏற்பட்ட ‘கண்டதும் காதல்’ போன்ற நட்புறவும் காரணம். மொத்தமாகப் பழகியது மூன்றே நாட்கள்தான் எனினும் கலைச் செல்வன் நெருங்கிய நண்பராக மனதில் இருக்கிறார். அதன் பின்னரான பாரீஸ் பயணங்கள் இன்னும் ஈடுசெய்ய முடியாத அவர் இழப்பை மேலும் மேலும் அழுத்தமாக உணரவைக்கின்றன. இந்த உரை அவருடைய நினைவுக்குச் சமர்ப்பணம்.
o
தமிழகப் பதிப்புச் சூழல் உலகமயமாதலின் தாக்கத்தில் உலகச் சூழலுடன் தவிர்க்க முடியாமல் இணைந்துகொண்டிருக்கிறது. அந்த இணைப்பின் பண்புகளையும் பக்க விளைவுகளையும