வாதைகளை வசீகரமாக்கிய ஆண் பேச்சு
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் செந்தியின் இக்கவிதைத் தொகுப்பு வடிவ-உள்ளடக்க அமைப்பில் கவிதையைத் தேடிக் கண்டடைதல் எனும் தனித்துவ அடையாளத்தின் குறியீடாகவும் அமைகிறது. புற அகத்தை ஆண்பேச்சாக்கித் தர்க்கித்து வளரும் கவிதையின் அழகியல், புறவயத்தில் மிகக் கச்சிதமான சுழிவுத் தன்மையைப் பெற்றுள்ளதைச் செந்தியின் அடையாளமாக இக்கவிதைகள் இனம் காட்டுகின்றன. உள்ளதை உள்ளவாறே பேசும் கண்ணாடி வழியாக மாயத்தை நிகழ்த்துவதில் சுவையரும்ப வைப்பது இவரின் பங்களிப்பு. புறவயமான முயற்சிகளுக்கு முன்னோடிகளை அடுக்குவது சுலபம்; வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறாத் தன்மையுடைய இப்புறவயம் இருண்மை அழகியலுக்கு நிகரான-நிறைவடையும் கேள்விச் சுவையையும் பெறுகின்றது.
இக்கேள்வியும் - தர்க்கமும் வலிகளின் பாற்பட்டது. பனிமூட்டத்தையும் அதில் ஒளிச் சிதறடிப்புகளையும் கொண்ட ஆதிக்கப் பொருளாதார முதலாளியத்திற்குள் விடுதலை வாழ்வை எண்ணியேங்கும் இயற்கையுயிரியின் மனப் பிறழ்வுக்குகந்த சொல்லும் உணர்வுமே இன்றைய கவிதைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் குத்தாட்டமும் ஓலமும் தன்னைத்தானே பேய்களாக்கிக் கொள்ளும் உடைப்புச் ச