குமாரநந்தன் கதைகள்: புதிய கோணம்
ஒவ்வொரு ஆண்டும் அறுபது அல்லது எழுபது புத்தகங்களை வாங்குகிறேன். சில புத்தகங்களை உடனடியாகப் படித்துவிடுவேன். இன்னும் சில புத்தகங்களைச் சற்றே தாமதமாகவாவது படித்து முடித்துவிடுவேன். எந்தக் காரணமும் இல்லாமலேயே பத்து அல்லது பதினைந்து புத்தகங்கள் அடுக்குகளிலேயே தங்கிவிடும். வேறொரு தருணத்தில் எடுத்துப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் உட்கார முடியாதபடி வேலைகள் பிறிதொரு திசையை நோக்கி என்னை இழுத்துச் சென்றுவிடும்.
பத்தாண்டுகளுக்கு முன்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் நான்கைந்து பைகள் நிறையப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ‘பதிமூன்று மீன்கள்’ என்கிற சிறுகதைத் தொகுதியும் இருந்தது. அந்த ஆண்டில் அந்தத் தொகுதியைத்தான் முதலில் படித்தேன். ஒரேநாளில் படித்து முடித்துவிட்டேன். அக்கதைகளை எழுதியவர் பாலமுருகன் என்பவர். அதுவரைக்கும் அந்த எழுத்தாளரின் பெயரை நான் அறிந்ததில்லை. அத்தொகுதியின் பின்னட்டையில் அவர் படம் அச்சிட்டிருந்தது. இளைஞர். அவருடைய சொந்தப் பெயரே அதுதான் என்று தெரிந்துகொண்டேன். நம்பிக்கையளிக்கும் வகையில் அவருடைய கதைமொழி அமைந்திருந்தது. எத