தேர்தல் ஆணையத்தின் எல்லைகள் எதுவரை?
தேர்தல் ஆணையம் 1950இல் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்து இவ்வளவு மதிப்புமிக்க தேர்தலைச் சந்தித்திருக்குமா என்பது தெரியவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகச் செலவழித்த தொகையே 3426 கோடி ரூபாய். அதிகாரப்பூர்வமற்ற முறையில் செலவழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தொகை முப்பதாயிரம் கோடியையும் தாண்டுகிறது. இது தில்லியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்த கணக்கு.
இந்தக் கணக்கெல்லாம் இந்திய அளவில். தமிழக அளவில் இன்னும் விசேஷக் கணக்கெல்லாம் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை தேர்தல் முறைகேட்டில் ‘முன்னணியில்’ இருப்பதாகப் பீஹாரையோ மற்ற மாநிலங்களையோ சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சொல்கிறார்கள். அந்த அளவுக்குத் தொடர்ந்து முறைகேடுகளில் முன்னணி. தொடர்ந்து என்னவொரு ஜனநாயகச் சாதனை!
இந்தத் தேர்தலிலும் சளைக்காத முன்னேற் றம். இந்தியா எங்கும் இல்லாத கட்டுப்பாடாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட முறைகேடு தொடர்பான புகார்கள். தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று மட்டும் தேர்தல் அதிகாரிகளால் ஒரு கோடி ரூபாய்