அணுஉலை உண்மைகளும் அடுத்திருக்கும் உயிர்களும்
அரச உண்மைகளுக் கும் மக்களின் உயிர்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பு பேரிடர் மேலாண்மையின் முக்கிய அம்சம். கடந்த மே 8, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிப் ‘பூவுலகின் நண்பர்கள்’ தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அரசும் அரசுத் துறைகளும் ஆவன அனைத்தும் செய்வார்கள் என்ற தனது அதீத நம்பிக்கையையும் நீதிமன்றம் பதிவுசெய்தது.
ஆனால் ஒரே வாரத் துக்குள் மே 14, 2014 அன்று மதியம் 12:30 மணியளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தது. அவர்களின் கூற்றுப்படி, அணுஉலையின் கொதிகலனுக்கு நீராவி கொண்டு செல்லும் குழாயில் ‘திடீரெனக் கசிவு ஏற்பட்டதில்’ ஆறு தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் அதில் இரண்டு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் நிலையைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர்கள் “நினைவோடுதான் இருக்கிறார்கள்” என்று அணுமின் நிலையத்தினர் அட்டகாசமாகப் பதிலளித்தனர்.
இந்த விபத்துச் செய்தியை உடனடியாக வெளியிட்ட பல ஊடகங