அனுபவம் கலையாகும் கதை
காலச்சுவடு இதழின் 25ஆம் ஆண்டு நிறைவை யொட்டிப் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. அதன் பகுதியாக 17, 18-05-2014 ஆகிய இருநாட்கள் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது. சூடாமணி நினைவு அறக்கட்டளை, கூடு ஆய்வுச் சந்திப்பு, காலச்சுவடு இணைந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பயிலரங்கை நடத்தின. அழகிய பெரியவன், பாவண்ணன் ஆகியோர் கருத் தாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஒருங்கிணைப் பாளராகப் பெருமாள்முருகன் பங்கு பெற்றார்.
பயிலரங்கின் முதல் நாளில் மூவரும் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். ‘சிறுகதை வாசிப்பு முறை’ என்கிற தலைப்பில் பாவண்ணனும் ‘சிறுகதை எழுதுதல்: அனுபவமும் பயிற்சியும்’ என்ற தலைப்பில் அழகிய பெரியவனும் ‘சிறுகதை அமைப்பும் மொழியும்’ என்ற தலைப்பில் பெருமாள்முருகனும் பேசினார்கள்.
பயிரலங்கிற்கு வந்திருந்த பங்கேற்பாளர் ஒருவர் ‘இவர்கள் நமக்காக தம் வாழ்நாளில் இரண்டு நாட்களை வழங்கியிருக்கிறார்கள்’ என்று சொன்னது மிகவும் பொருந்திப்போயிருந்தது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செய்கையான உண்ணுதல், உற