வெள்ளுறை பனியின் குருதி
பெண் ஏன் கவிதை எழுதுகிறாள், ஏன் அவள் தற்கொலை செய்கிறாள் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூற முடியும்? இரண்டும் வேறு வேறல்ல என்பதே என் முன்னுள்ள ஒரே பதிலாகும்.
கவிதைகளை எழுதிவிட்டு ஒருவேளை அவள் தற்கொலை செய்யாதுவிட்டால், வாழ்க்கையில் பலவிதங்களில் அவள் கொல்லப்படுவதைத் தாங்கிக்கொள்ள நேரிடும். உயிரோடிருப்பதே அதிசயமாகிப்போன உலகில் வாழ்வதற்காகக் கவிதை எழுத வந்த, எழுதுகிற பெண்களின் அனுபவங்கள் பலவும் இவ்விதமானவையாக அமைந்திருக்கின்றன.
ஒரு பெண் தன்னை வெளிப்படுத்தவும் மறைத்துக் கொள்ளவும் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறாள். நடை பிணமாக வாழ்வதிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்கொலை செய்கிறாள்.
மரணித்தல் ஒரு கலை
மற்ற அனைத்தையும் போலவே
நான் அதை மிகச்சிறப்பாகச் செய்கிறேன்
நான் அதை நரகம்போல் செய்கிறேன்
நான் அதை நிஜம்போல் செய்கிறேன்
இதற்காகவே பிறந்தவள்
நான் எனவும் சொல்லலாம்
ஒரு அறைக்குள் செய்யுமளவிற்கு அது சுலபமானது
அதைச் செய்துவிட்டு அசைவற்று கிடக்குமளவிற்கு
அது சுலபமானது
இன்னும் இறவாமல் துட