புனிதப்படுத்தும் ஜனநாயக கங்கை
ராஜபக்ஷேவை அழைக்க வேண்டாம் என்று மோடியிடம் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைப்பது படுஅபத்தமானது. இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒரு தலைவர் மற்றொரு இனப்படுகொலைக் குற்றவாளியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோருவதில் இருக்கும் முரண்நகை யாருக்கும் உறைப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டு மக்களைக் குஜராத்தில் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரை, உத்திரப் பிரதேசத்திலும் அசாமிலும் படுகொலைகளைத் தூண்டியதாகக் கருதப்படுபவரின் பதவி ஏற்பை இதற்காகப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கைகூட வைக்கத் திராணியற்ற ‘மதச்சார்பற்ற’ கட்சிகள், பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து அதிகார ஊழல்களில் பங்காளியாகத் துடிப்பவர்கள், இலங்கைத் தமிழருக்காகக் குரல்கொடுப்பது கொடுமையான முரண்நகை. மோடியை நீதிமன்றம் இன்னும் குற்றவாளியெனத் தீர்ப்பு அளிக்கவில்லை எனில் ராஜபக்ஷே மீது எந்தக் குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரதமரானது மோடியை புனிதப்படுத்திவிடும் எனில் அந்த ஜனநாயக கங்கை ராஜபக்ஷேவைப் பலமுறை புனிதப்படுத்தி விட்டது. இலங்கை தமிழரை இனப்படுகொலை செய்த நாடெனில் அதே க