பொறுப்புணர்வும் படைப்புத் திறனும்
முதலில் கலைஞன் பதிப்பகம் உரிமையாளர்கள் திரு. மாசிலாமணி அவர்களுக்கும் திரு. நந்தன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
சென்ற நூற்றாண்டில் தமிழ்ப் படைப் பிலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ள ஒரு சில சகோதர எழுத்தாளர் களின் தொகுப்புகளுடன் ‘சுந்தர ராமசாமியின் படைப்புகள்’ என்ற தலைப்பில் என் தொகுப்பொன்றையும் வெளியிட திரு. மாசிலாமணி அவர்களும் திரு. நந்தன் அவர் களும் விருப்பம் தெரிவித்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் சாதனையாளர்களுக்கு இணையாக என்னையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பதிப்பாளர்கள் என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.
வித்தியாசமான இந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆசையுடன் இருந்தேன். இடையில் குறுக்கிட்ட என் பயணம் அதை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. இப்போது தொலைதூரத்திலிருந்து இந்த இலக்கிய விழாவைக் கண்ணால் பார்க்கவும் இதில் படைப்பாளிகளாகக் கௌரவம் பெறும் லா.ச. ராமாமிருதம், ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகியோரது படைப்புகளில் நான் பெற்றுள்ள படிப்பனுபவத்தை, என் வளர்ச்சியைத