தலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்குக் கடிதமும் இராகவன் கொலையும்
1913 மார்ச் 12 தேதியில் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் (1907-1914) “பரிதாபக் கொலை! பரிதாபக் கொலை!! பரிதாபக் கொலை!!!, பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனைச் சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள்” என்று தலைப் பிட்டு அயோத்திதாசர் எழுதிய கட்டுரை வெளியானது. “தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனந் தாலுக்காவில் விட்லாபுரம் கிராமத்தில் ப.இராகவனென்னுமோர் குடியானவனிருந்தான்” என்று தொடங்கும் அக்கட்டுரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்த இராகவன் என்னும் பறையர் தனது நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி கொடுத்து வந்தார். ஆனால் அதே கிராமத்தில் உள்ள ரெட்டியார்கள் நாள் முழுவதும் வேலை வாங்கிக் கொண்டு ஓரணா மட்டுமே கூலி கொடுத்து வந்தனர். இதனால் கூலியாட்கள் இராகவனிடமே வேலைக்குச் சென்றனர். ஆத்திரம் கொண்ட ரெட்டிகள் இராகவனை மிரட்ட ஆரம்பித்தனர். மேலும் இராகவனிடம் சொந்தமாக நிலம் இருப்பதால்தான் அவனால் இரண்டணா கூலி கொடுக்க முடிகிறது. ஆகவே இராகவனை நிர்மூலமாக்க வேண்டுமென்று ரெட்டியார்கள் கங்கணம் கட்டினர். இதனால் தன்னைத் தற்கா