மோடிக்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் மதவாதிகள் அல்ல - ஞாநி
35 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக, சமூக செயற்பாட்டாளாராக, அரசியல் விமர்சகராக தேர்தல் அரசியலைக் கவனித்துவந்த ஞாநிக்கு நடந்து முடிந்த 16ஆவது இந்திய மக்களவைத் தேர்தல் மிகவும் புதிது. காரணம் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக இணைந்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார்.
இத்தனை நாள் தேர்தல் அரசியலை வெளியிலிருந்து அலசி வந்த ஞாநி இப்போது உட்புகுந்து அலசியிருக்கிறார். இது குறித்த அனுபவங்களைப் பகிந்துகொள்வதற்காக அவரைச் சந்தித்தோம்.
தேசிய அரசியலில் பாஜக இந்த அளவு வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நம்பி வாக்களித்தவர்கள்தான் காரணம் என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுவருகிறது. மோடி அலை அடிக்கவில்லை என்று வாதிட்டுவந்த நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இப்போதும் மோடி அலை வீசவில்லை என்றுதான் சொல்வேன். காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கெதிரான எத