அன்புள்ள நண்பர் சீனி. விசுவநாதன் அவர்களுக்கு
நாகர்கோவில்
28.1.81
சுந்தர ராமசாமி,
அன்புள்ள சீனி. விசுவநாதன் அவர்கட்கு.
உங்கள் 25.1.81 கடிதம்.
உங்களிடமிருந்து கடிதம் வருவது எனக்கு தொந்தரவு ஆகுமா?
ஒரு நாளும் ஆகாது. எப்போதும் சந்தோஷத்தைத் தரக்கூடியதே அது.
பாரதியின் பெயர்ப்பட்டியல் தாமதமாக அச்சாவதில் ஆயாசத்திற்கு இடமில்லை என்று தோன்றுகிறது. மிகவும் சிரமமான பணி இது. என்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறது. திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு மேலும் எவ்வளவோ சிரமங்கள் இருக்கும். 367 நூல்களுக்கான விவரங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்று அறியும்போது மலைப்பாக இருக்கிறது. பாரதி மீது நம்மவர்கள் காட்டியுள்ள அக்கறை எவ்வளவு அதிகமானது என்பதைத்தான் இது காட்டுகிறது.
நான் உங்களிடம் நேர