மது அருந்துதலை எப்படிக் கையாள்வது?
இந்தியச் சமூகம் மதுவுடன் மாறுபட்ட உறவைக் கைக்கொள்ள வேண்டும்; மதுவிலக்கும் தீர்வல்ல, கட்டுப்பாடற்ற விற்பனையும் தீர்வல்ல.
கேரள அரசு, மதுவைத் தடைசெய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள், மக்களிடையே ஆளும் கூட்டணிக்கு உள்ள அபிமானம் சரிவதை நிறுத்தும் ஆசை என்று இதற்கு உந்துதல் எதுவாக இருந்தாலும், மது அருந்துதல், மதுப் பழக்கம், குடும்ப வன்முறை, மதுவிலக்கு, மாநில அரசுகள் நிதி ரீதியாக மது விற்பனையைச் சார்ந்திருத்தல் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புள்ள சிக்கலான பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்வதற்கான தருணம் இது.
மது அருந்துதல் - குறிப்பாக அது குடிநோயாகும்போது - பல இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு. அது பல சமயங்களில் வன்முறைக்கு வித்திடுதல், நிதி ரீதியான அழிவை விளைவித்தல், மதுப் பழக்கம் உள்ளவரின் உடல்நலத்தைப் பாதித்தல் எல்லாம் நன்கு அறியப்பட்டவையே. இந்தக் கேடுகள் வர்க்கம், ஜாதி, மதம், இடம் ஆகியவற்றைத் தாண்டி எல்லா மக்களையும் பாதித்தாலும், மிகப்பெரிய சீரழிவுகளை ஏழைகள் மத்தியில்தான் காண முடிகிறது. குடிக்கும் ஏழைகள் மத்தியில், உண