‘பாரதி 93’ பயன் நிறை மாலைகள்
கடந்த ஓராண்டாக தென் சென்னையில் இயங்கும் ‘பனுவல்’ புத்தக விற்பனை நிலையமும், இருபத்தைந்தாவது ஆண்டில் நடையிடும் காலச்சுவடு இதழும் இணைந்து ‘பாரதி 93’ என்ற இலக்கியப் பகிர்தல் தொடரை செப்டம்பர் 2014இல் நடத்தின. பாரதி நினைவு நாளையொட்டி, அத்தொடர் நிகழ்விற்கு அப் பெயர் வைக்கப்பட்டது. பனுவல் ஏற்கெனவே ஏப்ரலில் சமூகநீதி மாதம் எனக் கொண்டாடியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் பேச சில மாலைநேரங்களைப் பயன்படுத்த எண்ணமிட்டதன் விளைவு ‘பாரதி 93’.
செப்டம்பர் மாதத்தின் அனைத்து சனி, ஞாயிறு மாலைகளிலும் நவீன இலக்கியத்தைக் குறித்து பாரதியை மையமிட்டு உரைகள் திட்டமிடப் பட்டன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக பங்களூரு நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதன் விளைவாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டதால் கடைசி