முல்லை பெரியாறு: ஒரு வெள்ளத் தகராறு
முல்லை பெரியாறு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது. கேரளாவில் பலராலும் ஜீரணிக்கப்பட முடியாததாக இருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” எனக் குரல்கொடுக்கும் சிபிஐ கட்சியைச் சார்ந்த கேரள சட்டமன்ற உறுப்பினரும் அவரது சகாக்களும் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் வாக்குவாதம் செய்து, அவர்களைத் தாக்கி, பேபி அணையைச் சேதப்படுத்த முயன்றுள்ளனர்.
அண்மையில் அணைப்பகுதியில் அதிக மழை பொழிந்ததாலும், நீர்வரத்து அதிகமானதாலும், கேரளாவெங்கும் பதற்றம் நிலவியது. தமிழகம் அணையிலிருந்து குறைவான அளவே தண்ணீர் எடுப்பதால்தான் அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கேரள அரசு குற்றம் சாட்டியது. நாற்பது லட்சம் மக்களின் பாதுகாப்பு குறித்து எந்தவிதக் கவலையுமின்றி தமிழக அரசு நீர்மட்டத்தை குறைக்க மறுக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் குறை சொன்னார். கேரள அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்களைப் பிரச்சினையில் தலையிடச் செய்யவேண்டும் என்ற