தமிழில் புத்தகப் பண்பாடு
தமிழில் புத்தகப் பண்பாடுள்ள நிலையை ஆராய வேண்டுமென்றால் எத்தகைய சூழ்நிலைகளை அது கடந்து வந்துள்ளதென்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்ப் புத்தகப் பண்பாட்டின்மேல் விழுந்த அழுத்தங்களையும், தற்பொழுதைய அதன் நிலைமைக்கான அக, புற காரணிகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
எழுத்தாளரும் அரசியல் விமர்சகரும் மசாசூ செட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் தத்துவத்துறை பேராசிரியருமான நோம் சாம்ஸ்கி, ஊடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:-
‘‘எந்தமாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்பு கிறோம், எந்த மாதிரியான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய இயலும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாகவோ சர்வாதிகாரமாகவோ மாற்றுவதில் ஊடகம் தீர்மானக