போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்காகத் தமிழ் - ஆங்கில பொதுஅறிவு மாதஇதழாக
வெளிவரும் ‘பொது அறிவு’ இதழில் (ஜூலை 2014) அயோத்திதாசர் பற்றி இரண்டு கட்டுரைகள்
வெளியாகியுள்ளன. இரண்டும் அயோத்திதாசரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி (1914-2014) அவரை
அறிமுகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன. ஒரு கட்டுரையை ‘பண்டிதர் அயோத்திதாசர்
100’ என்னும் தலைப்பில் கோவி. லெனின் எழுதியுள்ளார். அயோத்திதாசரின் எழுத்துக் களே
நேரடியாகப் பயன்படுத்தப்பட்ட கட்டுரை மற்றொன்று. அயோத்திதாசரை அறிமுகப்படுத்திய
விதத்திலும் ‘பொது’ வாசகர்களுக்கான வரையறைக்கேற்பவும் எழுதப்பட்ட கட்டுரை என்ற
விதத்தில் கோவி. லெனின் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் புலப்படும்
பார்வைக் குறைபாடு தலித்துகள் பற்றி நிலவிவரும் சாதியப் பார்வையை மறைமுகமாக மறுஉறுதி
செய்வதாக இருப்பதால் அதை இனங்காண்ப